புதுடெல்லி:
துபாயிலிருந்து கோலாலம்பூருக்கு எமிரேட்ஸ் விமானத்தில் மலேசிய பெண் ஒருவர் இறந்துகிடக்க காணப்பட்டார்.
57 வயதான அப்பெண்மணி கடுமையான மார்பு வலியால் அவதிப்பட்டதாகவும், பயணத்தின் போது அவர் மயக்கமடைந்தார் என்றும் உம்ரா நிகழ்த்திய பின்னர், அவர் மீண்டும் மலேசியாவிற்கு திரும்பிக் கொண்டிருந்ததாகவும் பெர்னாமா தெரிவித்துள்ளது.
மருத்துவ தேவை காரணமாக இந்த விமானம் அவசரமாக கடந்த சனிக்கிழமை (பிப்.4) காலை இந்தியாவின் சென்னையில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
சென்னையில் பிரேத பரிசோதனைக்குப் பிறகு உயிரிழந்த பெண்ணின் உடல் மலேசியாவுக்கு திருப்பி அனுப்பப்படும் என்று அது மேலும் குறிப்பிட்டுள்ளது.




















