கம்போடிய பிரதமர் அதிகாரப்பூர்வ பயணமாக மலேசியா வருகை

புத்ராஜெயா:

லேசியாவிற்கு ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கம்போடிய பிரதமர் ஹன் மானெட், இன்று செவ்வாய்க்கிழமை (பிப். 27) பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்து விவாதித்தார்.

ஆகஸ்ட் 2023 இல் கம்போடியாவின் பிரதமராக நியமிக்கப்பட்டதிலிருந்து ஹன் மானெட்டின் முதல் மலேசியப் பயணம் இதுவாகும்.

பிரதமர் அலுவலகம் அமைந்துள்ள பெர்டானா புத்ராவில் காலை 10.15 மணியளவில் ஹன் மானெட்டிற்கு அதிகாரப்பூர்வ வரவேற்பு அளித்து வரவேற்றார் அன்வர்.

அதனைத்தொடர்ந்து, மலேசியா மற்றும் கம்போடியாவின் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டது.

ஹன் மானெட்டை வரவேற்க துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி மற்றும் டத்தோஸ்ரீ ஃபதில்லா யூசோப், அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமட் ஸுகி அலி மற்றும் பல அமைச்சரவை அமைச்சர்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here