பூட்டிய காரில் இறந்து கிடந்த இருவர்

ரொம்பினில் உள்ள Muadzam Shah அருகே உள்ள எண்ணெய் நிலையத்தில் பூட்டிய காரில் ஆணும் பெண்ணும் இறந்து கிடந்தனர். பகாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், Muadzam Shah  நிலையத்தில் இருந்து ஆறு பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

பலியான இருவரும் பெட்ரோல் நிலையத்தின் வாகன நிறுத்துமிட காரில் இருந்ததாக அவர் கூறினார். தீயணைப்பாளர்கள் காரின் கதவைத் திறந்தனர். வாகனத்தில் மயக்கமடைந்த ஆண் மற்றும் பெண் இருவரையும் கண்டுபிடித்தனர் என்று அவர் கூறினார்.

பின்னர் இருவரும் இறந்துவிட்டதாக மருத்துவ பணியாளர்கள் உறுதி செய்ததாகவும், உடல்கள் மேல் நடவடிக்கைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here