மலைச்சாரலின் தூறலில் – பிரேசர் மலை

தித்திவங்சா மலைத்தொடரில் அமைந்துள்ள பிரேசர் மலை உல்லாச பொழுதுபோக்கு இடமாகும். பிரேசர் மலை சுற்றிலும் ஏழு மலை உச்சிகள் அமைந்துள்ளது மிகவும் சிறப்பான காட்சியாகும். பிரேசர் மலை பறவைகளின் சரணாலயமாகவும் மலை பிரதேச மழை காடுகளுக்கு பிரசித்தி பெற்று திகழ்கிறது.

 

குளிர்ச்சியான தட்ப வெட்ப நிலையை கொண்ட பிரேசர் மலை பொதுவாக எல்லா காலங்களிலும் மழை பொழியும். ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை குறைந்த அளவில் மழை பொழியும். இதுவே பிரேசர் மலைக்கு செல்ல சிறப்பான காலம். பரபரப்பான வாழ்க்கையில் இருந்து விடுபட்டு அமைதியான இரம்யமான ஓய்வுக்கு மிகப் பொருத்தமான இடம் பிரேசர் மலை.

மலையின் நில அடையாளமாக அமைவது அதன் மத்தியில் உள்ள மணிக்கூண்டு. வரலாற்று சான்றாக காலணிய கால கட்ட நுணுக்கத்தில் அமைந்துள்ள மணிக்கூண்டு சுற்றுப்பயணிகளை வெகுவாக கவரும் அம்சமாக விளங்குகிறது.

உடற்பயிற்சியில் ஆர்வம் உள்ளவர்களுக்கும் மலை ஏறுவதில் அலாதி பிரியம் கொண்டவர்களுக்கும் அற்புத இடமாக உள்ளது பிரேசர் மலை. இங்கு இயற்கை செல்தடங்கல் (Natural Trails) மற்றும் பைன் டிரி டிரெய்ல் (Pine Tree Train) காடுகளின் செல்தடங்கல் என இயற்கை எழில் நிறைந்து அமைக்கப்பட்டுள்ளது.

பிரேசர் மழையில் அலேன் ஏரியில் படகு சவாரி மனதிற்கு உற்சாகத்தை தரும். பிரேசர் மலைக்கு வரும் சுற்றுப்பயணிகள் அம்பு எய்தல், குதிரை சவாரி போன்ற புது அனுபவங்களையும் பெறலாம் ஒரு. கோல்ஃப் பிரியர்களுக்கு பிரேசர் மலை கோல்ஃப் ஒரு வரப்பிரசாதம்.

ஜெரியாவ் நீர்வீழ்ச்சி மனதை மயக்கும் அம்சமாக அமைந்துள்ளது. குளிர்ந்த நீரில் நீராடுவது புதிய அனுபவமாக அமையும். அந்த குளு குளு நீர் குளியல் மனதுக்கும் உடம்பிக்கும் புதுத்தெம்பைத் தரும்.

பிரேசர் மலையில், கோட்டையகள் பாணியிலான தங்கும் இடங்கள், உணவு விடுதிகள் எனக் கொண்டுள்ளது. வரலாற்று அழகுகளையும் எழில் கொஞ்சும் பசுமையையும் கண்முன் பார்த்து செல்ல வேண்டிய இடம் பிரேசர் மலை. இயற்கையும், வரலாறு இணைந்து ஜில்லென்ற காற்றில் நம் மனதை பறிக்கும் மலைச்சாரலின் தூறலில் நனைந்து தான் பாருங்களேன் நீங்களும்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here