பாசீர் கூடாங்:
இறக்குமதி செய்வதற்குரிய அனுமதியின்றி நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட சுமார் 4 இலட்சம் ரிங்கிட் மதிப்புள்ள 25 டன் பன்றி இறைச்சியை ஜோகூர் மக்கிஸ் பறிமுதல் செய்தது.
நேற்று (மார்ச் 12) மாலை 6 மணியளவில், பாசீர் கூடாங் துறைமுகத்தின் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கொள்கலன் குறித்த ஆய்வின் போது, இந்த இறைச்சி கைப்பற்றப்பட்டதாக ஜோகூர் மக்கிஸ் இயக்குனர் ஏடி புத்ரா முகமட் யூசோஃப் தெரிவித்தார்.
“வழக்கமான பரிசோதனையின் அடிப்படையில், ஒவ்வொரு இறைச்சியிலும் லேபிள் இல்லாததால், குறித்த சரக்கு இறக்குமதி விதிமுறைகளைப் பின்பற்றவில்லை என்பதை தாம் கண்டறிந்ததாக அவர் மேலும் கூறினார்.
“இறக்குமதி செய்யப்படும் ஒவ்வொரு இறைச்சி பொட்டலத்திலும் குறித்த விளங்கு படுகொலை செய்யப்பட்ட தேதிகள் மற்றும் இறைச்சி பதப்படுத்தப்பட்ட ஆலையின் பெயர், முகவரி மற்றும் எண்ணிக்கை ஆகியவை இருக்க வேண்டும் ,” என்று அவர் இன்று (மார்ச் 13) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் அவர் தெரிவித்தார்.
இறக்குமதி அனுமதியின்றி மக்கிஸ் நிர்ணயித்த நிபந்தனைகளுக்கு இணங்கத் தவறியது மலேசிய தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் ஆய்வு சேவைகள் சட்டம் 2011 இன் பிரிவு 15 (1) இன் கீழ் ஒரு குற்றமாகக் கருதப்படுகிறது, இது அதே சட்டத்தின் பிரிவு 15 (2) இன் கீழ் தண்டனைக்குரியது.
நிரூபிக்கப்பட்டால் “ஒரு நபருக்கு RM100,000 க்கு மேல் அபராதம் விதிக்கப்படலாம், அல்லது ஆறு ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைதண்டனை விதிக்கப்படலாம் ” என்று அவர் கூறினார்.