பிரதமரின் ஜெர்மனி பயணத்தின் எதிரொலி ; RM45.4 பில்லியன் முதலீட்டிற்கு சாத்தியம்

பெர்லின்:

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் ஜெர்மனியிலுள்ள முதலீட்டு நிறுவனங்களுடன் நடந்த சந்திப்புகளிலிருந்து, சுமார் RM45.4 பில்லியன் மதிப்பிலான முதலீடுகளுக்கு வாய்ப்புள்ளதாக என்று டத்தோ ஸ்ரீ தெங்கு ஜாஃப்ருல் அப்துல் அஜீஸ் தெரிவித்துள்ளார்.

எதிர்பார்க்கப்படும் சாத்தியமான முதலீடுகள், புதிய, விரிவாக்கம் மற்றும் பல்வகைப்படுத்தல் திட்டங்களை உள்ளடக்கியது என்று முதலீடு, வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சருமான அவர் கூறினார்.

இந்தச் சாத்தியமான முதலீட்டுத் திட்டங்கள் செமிகண்டக்டர், வான்போக்குவரத்து, மருத்துவ உபகரணங்கள், இரசாயனம் மற்றும் சேவைத் துறை ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளதாக அவர் கூறினார்.

ஜெர்மன் நகரங்களான ஸ்டட்கார்ட், மியூனிக், பெர்லின் மற்றும் பிராங்பேர்ட் மற்றும் பெல்ஜியம் மற்றும் பிரான்சிலிருந்து மொத்தம் 38 தொழில்துறைகளின் தலைவர்கள் பங்குகொண்டனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 10) முதல் 6 நாட்கள் பயணமாக ஜெர்மனி சென்றுள்ள பிரதமர், அங்குள்ள உலகின் மிகப்பெரிய பொருளாதார நிறுவனங்களை சந்திப்பார் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here