வேலைக்கு செல்லும் 3,850 தாய்மார்களுக்கு “MamaKerja” திட்டத்தின் கீழ் RM1,000 ஊக்கத்தொகை

ஷா ஆலம்:

கடந்த ஆண்டு மாநிலத் தேர்தலுக்கான சிலாங்கூர் ஒற்றுமை கூட்டணியின் அறிக்கையின் அடிப்படையில், மொத்தம் 3,850 வேலை செய்யும் தாய்மார்கள் “MamaKerja” திட்டத்தின் கீழ், தங்கள் குழந்தைகளின் பராமரிப்புக்கான ஊக்கத்தொகையாக RM1,000 ஐ ஊக்கத் தொகையாகப் பெற்றுள்ளனர்.

மார்ச் வரை மாநில அரசு பெற்ற மொத்தம் 5,595 விண்ணப்பங்களில் முதற்கட்டமாக 3,850 பேருக்கு இந்த ஊகதொகை வழங்கப்படுவதாக மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

“ஏனைய விண்ணப்பங்களில் வழங்கப்பட்ட ஆதார ஆவணங்களை சரிபார்ப்பு மற்றும் ஆய்வில் உள்ளதாக அவர் நேற்று ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள ஓர் பதிவில் கூறினார்.

விண்ணப்பதாரர்களிடையே நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், குழந்தை பராமரிப்புக்கான செலவு வேலை செய்யும் தாய்மார்களுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது என்று அவர் சொன்னார்.

கடந்த ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி தொடங்கிய ‘MamaKerja’ முயற்சி, கடந்த ஆகஸ்ட் மாதம் மாநிலத் தேர்தலின் போது பக்காத்தான் ஹராப்பான் (PH) மற்றும் பாரிசான் நேஷனல் (BN) கூட்டணி மக்களுக்கு அளித்த உறுதிமொழிகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here