இஸ்ரேலிய பேரீச்சம்பழங்களின் விற்பனையை உள்நாட்டு வர்த்தக அமைச்சகம் கண்காணிக்கிறது

கோலாலம்பூர்:

ஸ்ரேலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பேரீச்சம்பழங்கள் மலேசியாவில் விற்பனை செய்வதாக கூறப்படுவது தொடர்பில் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம் கண்காணிக்கிறது.

வாடிக்கையாளர்களுக்கு குறித்த பேரீச்சம் பழங்கள் விற்கப்படுவதைத் தடுக்க பல்வேறு சட்டங்கள், குறிப்பாக வர்த்தக விவரச் சட்டம் 2011 மூலம் அமைச்சகம் தொடர்ந்து கண்காணிக்கும் என்று அதன் அமைச்சர் டத்தோ ஆர்மிசான் முகமட் அலி கூறினார்.

” இஸ்ரேலிய பேரீச்சம்பழங்களின் விற்பனை தொடர்பாக, குறிப்பாக ரமலான் நோன்புக் காலம் மற்றும் நோன்புப்பெருநாள் காலங்களில் அமைச்சகம் அமல்படுத்தியுள்ள ‘Op Pantau’ வில் நிலையான இயக்க நடைமுறைகளில் (SOP) இந்த கண்காணிப்பும் உள்ளடக்கப்படும் என்று, இன்று (மார்ச் 14) நாடாளுமன்றத்தில் அமைச்சர்களின் கேள்வி நேரத்தின் போது, அவர் கூறினார்.

இஸ்ரேலிய பேரீச்சம்பழங்களை இணையம் மூலமாக விற்பனை செய்வது தொடர்பான அரசாங்கத்தின் நடவடிக்கைகளை அறிய விரும்பிய டத்தோ ரோசோல் வாஹிட்டின் (PN-Hulu Terengganu) கேள்விக்கு அவர் அளித்த பதிலில் அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் இந்த விவகாரத்தை அமைச்சகம் தீவிரமாகக் கருதுவதாகவும், நுகர்வோரை தவறாக வழிநடத்த முயற்சிக்கும் பொறுப்பற்ற தரப்பினருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அர்மிசான் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here