சமூக ஊடகங்களில் வைரலான கடையடைப்பு அறிவிப்பு; தூய்மைக்கேடு காரணம் என்கிறது சுகாதாரத்துறை

ஜோகூர் பாரு:

பண்டார் ஶ்ரீ ஆலாமிலுள்ள இரு உணவகம் தூய்மைக்கேடாக இருந்ததாகக் கூறி, அதை இரண்டு வாரங்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த வியாழன் (பிப்ரவரி 22) அங்குள்ள ஒரு ஹைப்பர் மார்க்கெட்டில் உள்ள உணவகத்தில் சோதனை நடத்தப்பட்டதாக ஜோகூர் சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் மொஹ்தார் புங்குட் @ அஹ்மட் தெரிவித்தார்.

“குறித்த வளாகம் திருப்தியற்ற சுகாதார நிலைகளுடன் அழுக்காக இருப்பதைக் கண்டறிந்தனர்.

“பெரும்பாலான தொழிலாளர்கள் உணவுப்பரிமாறும் மற்றும் அவற்றை சரியான முறையில் கையாளவும் தவறிவிட்டனர்” என்று அவர் புதன்கிழமை (பிப் 28) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

எனவே குறித்த உணவகத்தை 14 நாட்களுக்கு மூடுமாறு சுகாதாரத் துறை உத்தரவிட்டது, குறித்த காலப்பகுதியில் வணிக நடத்துநர் வளாகத்தை உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது.

அங்கு பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களும் சான்றளிக்கப்பட்ட உணவு கையாளும் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டதாக டாக்டர் மோஹ்தார் கூறினார்.

“அனைத்து உணவுக் கடை நடத்துநர்களும் உணவுச் சட்டம் 1983 இன் கீழ் அமைக்கப்பட்ட விதிமுறைகளுக்குக் கீழ்ப்படியுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், தவறினால் அவர்களின் வளாகத்தை மூடுவதுடன், அபராதமும் விதிக்கப்படும்” என்று அவர் மேலும் கூறினார்.

முன்னதாக பிப்ரவரி 22 முதல் மார்ச் 7 வரை விதிக்கப்பட்ட கடையடைப்பு அறிவிப்பு சம்மந்தமான புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here