ரமலான் மாதத்தில் உணவினை வீணாக்காதீர்: துணைப் பிரதமர்

கடந்த ஆண்டு ரமலான் மாதத்தில் 240,000 டன்களுக்கும் அதிகமான திடக்கழிவுகள் அகற்றப்பட்டன. அதில் ஒரு பெரிய பகுதி உணவு கழிவுகளாக இருந்தது என்று டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறுகிறார். கடந்த ஆண்டு ரமலான் மாதத்தில் சேகரிக்கப்பட்ட 243,095 டன் திடக்கழிவுகளில் 86,177 டன்கள் உணவுக் கழிவுகள் என்று துணைப் பிரதமர் கூறினார்.

உள்ளாட்சி மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொது சுத்திகரிப்பு கழகத்தின் 2023 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர திடக்கழிவு தரவுகளின் அடிப்படையில், மலேசியர்கள் தினசரி 17,379 டன் உணவுக் கழிவுகளை வீசினர். இது ஒரு நபருக்கு 473 கிராம் ஆகும் என்று அவர் கூறினார்.

வியாழன் (மார்ச் 14) மஸ்ஜித் ஜமேக் லாயாங்-லயாங்கில் நடைபெற்ற ரமலான் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அஹ்மத் ஜாஹிட் தனது உரையில் இவ்வாறு கூறினார். இஸ்லாமியர்கள் வீண்விரயம் மற்றும் செலவுகளை குறைக்கும் மாதமாக ரமலான் இருக்க வேண்டும் என்றும், மாறாக அல்ல என்றும் அவர் கூறினார். விரயத்தைத் தவிர்க்கத் தேவையானதை மட்டுமே வாங்குவதன் மூலம் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கூறினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here