சுங்கை பட்டாணி :
இன்று அதிகாலை குருணின் வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் 75.2ஆவது கிலோமீட்டரில் ஏற்பட்ட விபத்தில் விரைவு பேருந்து ஓட்டுநர் ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார், மேலும் ஆறு பேர் அதிஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.
டிரெய்லர் மற்றும் விரைவுப்பேருந்து மோதிய விபத்து தொடர்பில், தங்களுக்கு அதிகாலை 4.02 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், அதனைத் தொடர்ந்து, தீயணைப்பு மீட்புக் குழு அதிகாலை 4.19 மணிக்கு அந்த இடத்திற்கு வந்ததாகவும் குவார் செம்பெடேக் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர், துணை தீயணைப்பு கண்காணிப்பாளர் முகமட் ஃபௌசி ரசாலி கூறினார்.
42 வயதான ஆண் பேருந்து ஓட்டுநரின் உடல் எரிந்த நிலையில் அவரது இருக்கையில் சிக்கியிருந்ததாக அவர் கூறினார்.
“19 முதல் 57 வயதுடைய உதவிப் பேருந்து ஓட்டுநர் மற்றும் 32 வயதான டிரெய்லர் ஓட்டுநர் உட்பட ஐந்து பேர் உயிர் தப்பினர். இருப்பினும், 29 வயதான பெண் பயணி ஒருவருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.