இரண்டாண்டுகளாக வரி கட்டாது ஏமாற்றிய ஆடவருக்கு அபராதம்

கோல திரெங்கானு:

இரண்டு ஆண்டுகளாக உள்நாட்டு வருவாய் வாரியத்திடம் (LHDN) வரிக் கணக்கைச் சமர்ப்பிக்கத் தவறியதற்காக, கட்டுமான நிறுவன இயக்குனருக்கு RM9,000 அபராதமும் RM536,549.13 சிறப்பு அபராதமும் விதித்து நேற்று கோல திரெங்கானு மாவட்ட நீதிமன்றம் தண்டனை விதித்தது.

மாவட்ட நீதிமன்ற நீதிபதி யுஹானிஸ் முகமட் ரோஸ்லான் முன்னிலையில், குற்றத்தை ஒப்புக்கொண்ட 42 வயதான நூர் ஃபராசியேலா முகமட் என்பவருக்கு இத்தண்டனையை அவர் நிறைவேற்றினார்.

மேலும் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுக்கான காலாவதியான வரியை RM178,849.71 செலுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

நூர் ஃபராசியேலா அபராதத்தை செலுத்தியதாக பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

2019 ஆம் ஆண்டிற்கான வரி விதிக்கக்கூடிய வருவாய் RM28,083 ஆக இருந்தது, இதற்கு அவர் RM4,774.11 வரி செலுத்த வேண்டும், அதேசமயம் 2020க்கான வரி விதிக்கக்கூடிய வருவாய் RM174,075.60 இது வரியுடன் RM900,315 என்றும் கூறப்பட்டுள்ளது.

வருமான வரிச் சட்டம் 1967 இன் பிரிவு 112 (1A) இன் கீழ் இந்த குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது, இது RM1,000 முதல் RM20,000 வரை அபராதம் அல்லது ஆறு மாதங்களுக்கு மிகாமல் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் மற்றும் சிறப்புத் தண்டனையும் விதிக்கப்படும். அல்லது மூன்று மடங்கு வரி செலுத்த வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here