கர்ப்பிணி காதலியை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபரின் வழக்கு கிள்ளான் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம்

சுங்கை பெசார்: கர்ப்பிணிப் பெண்ணைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபரின் வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டது. முஹம்மது ஃபக்ருல் அய்மான் சஜாலி 21, மீதான வழக்கை கிள்ளான் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு துணை அரசு வழக்கறிஞர் நூருல் சோபியா ஜெய்சல் விண்ணப்பித்ததைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் சித்தி ஹஜர் அலி இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

வியாழக்கிழமை (மார்ச் 21) நடைபெற்ற விசாரணையில், முன்னாள் கல்லூரி மாணவரான முஹம்மது ஃபக்ருல் அய்மான் சார்பில் வழக்கறிஞர் முஹம்மது நோர் டாம்ரின் ஆஜரானார். கடந்த ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி, மே 22 ஆம் தேதி இரவு 8.30 மணி முதல் மே 23, 2023 அன்று காலை 8 மணி வரை  ஜாலான் சுங்கை லீமாவில் நூர் அனிசா அப்துல் வஹாப் (21) என்பவரைக் கொலை செய்ததாக முகமது ஃபக்ருல் அய்மான் மீது குற்றம் சாட்டப்பட்டது. குற்றவியல் சட்டத்தின் 302 ஆவது பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது. இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனையை வழங்கப்படலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here