ஒரு வேளை மைடின் அதுபோன்ற காலுறைகளை விற்றிருந்தாலும் புறக்கணிப்பை சந்திக்க நேரிடும்: அக்மல்

தேசத்தை பிளவுபடுத்தக்கூடிய சர்ச்சைக்குரிய காலுறை பிரச்சினை போன்ற 3R (இனம், மதம் மற்றும் ராயல்டி) பிரச்சினைகளில் பேசுவதை நிறுத்துமாறு டத்தோ அமீர் அலி மைடின் அழைப்பு விடுத்தற்காக டாக்டர் அக்மல் சலே அவரை சாடினார்.  அம்னோ இளைஞர் தலைவர் சனிக்கிழமை (மார்ச் 23) டிக்டோக்கில் மைடின் நிர்வாக இயக்குனர் குறித்து உரையாடினார். மேலும்  இஸ்லாத்தை பாதுகாப்பதில் இருந்து அவர் பின்வாங்க கூடாது என்றும் அவர் கூறினார்.

இந்தப் பிரச்சினை கே.கே. மார்ட் சீனர் (சொந்தமாக) இருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றியது அல்ல. கேகே மார்ட் இஸ்லாமியர்களை அவமதித்துள்ளது. எனவே கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்மல் கூறினார். இதையும் நான் அமீரிடம் சொல்ல விரும்புகிறேன்: இந்த விஷயம் மைடின் ஹைப்பர் மார்க்கெட்டில் நடந்தால், நாங்கள் மைடினையும் புறக்கணிப்போம் என்றார் அவர்..

பூமிபுத்ரா சில்லறை விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவரான அமீர், காலுறைகள் பிரச்சினையை அரசியலாக்க வேண்டாம் என்று முன்பு கூறியிருந்தார், ஆனால் இது ஒரு தீவிரமான விஷயம் என்பதை ஒப்புக்கொண்டார். அதே TikTok வீடியோவில், முன்னாள் அமைச்சரும் முன்னாள் வனிதா அம்னோ தலைவருமான டான்ஸ்ரீ ரஃபிடா அஜீஸின் விமர்சனத்திற்கும் அக்மல் பதிலளித்தார். அவர் காலுறை பிரச்சினையில் மேலும் பதற்றத்தைத் தூண்டுவதை நிறுத்துமாறு அக்மலை வலியுறுத்தினார்.

மோசமான நபர்களை எதிர்கொள்ளும் போது முஹம்மது நபி காட்டிய முன்மாதிரியான கட்டுப்பாட்டை இஸ்லாமிய அரசியல்வாதிகள் பின்பற்ற வேண்டும் என்று அவர் பரிந்துரைத்திருந்தார். கேகே சூப்பர் மார்ட்டுக்கு ஒரு கடுமையான பாடம் கற்பிக்க இந்த நாட்டில் இஸ்லாமியர்களின் ஒற்றுமையைக் காட்ட விரும்புகிறோம். எப்படி? ஒரு புறக்கணிப்பு. இஸ்லாமியர்களின் புறக்கணிப்புக்கு அவர்கள் ஏன் பயப்பட வேண்டும்? அவர்கள் ஏற்கெனவே tycoons இல்லையா என்று அவர் கேள்வி எழுப்பினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here