கோலாலம்பூர்:
வெப்பத்தாக்கம் காரணமாக 22 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி பகாங்கின் மாரானில் குறித்த மரணம் நிகழ்ந்ததாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.
“மலேசியா இன்னும் மூன்றாவது நிலை வெப்ப அலையை எதிர்கொள்ளவில்லை என்பதற்காக நாங்கள் இறைவனுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கவேண்டும், ஆனால் காலநிலை மாற்றம் மற்றும் ஓசோன் படலத்தின் சிதைவு ஆகியவை தீவிரமடைந்ததால், இது எந்த நேரத்திலும் நிகழலாம் என்று வட்டார மற்றும் புறநகர் மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும் இருக்கும் என்று அவர் கூறினார்.
“இந்த வெப்பத் தாக்கத்தை கட்டுப்படுத்த தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் மற்றும் மலேசிய ஆயுதப் படைகள் இணைந்து குறிப்பிட்ட பகுதிகளில் செயற்கை மழை பொழிவிப்பு உள்ளிட்ட செயல்முறை மூலம், அவற்றை நாங்கள் சமாளிக்க முடியும் என்று நம்புகிறோம்” என்று அவர் இன்று மக்களவையில் கூறினார்.
செனட்டர் டத்தோ முகமட் ஹிசாமுடின் யஹாயாவின் மேக விதைப்பு அல்லது செயற்கை மழை பொழிவிப்புக்கான செலவு தொடர்பான கேள்விக்கு அஹ்மட் ஜாஹிட் மேற்கூறியவாறு பதிலளித்தார்.