கோலாலம்பூர்:
தலைநகர், புக்கிட் பண்டாராயாவின் லோராங் கெமானிஸில் உள்ள ஒரு வீட்டில் நேற்றிரவு ஏற்பட்ட தீப்பரவலில் முதியவர் ஒருவர் காயமின்றி உயிர்தப்பினார்.
குறித்த சம்பவம் தொடர்பில், இரவு 20:12 க்கு கோலாலம்பூர் செயல்பாட்டு மையத்திற்கு அழைப்பு வந்ததாக அம்மையத்தின் செயற்பாட்டுத் தலைவர் கூறினார்.
உடனே அந்த இடத்திற்கு பந்தாய் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம், ஸ்ரீ ஹர்தாமாஸ்,ஜாலான் ஹாங் துவா, செந்தூல் ஆகிய தீயணைப்பு நிலையங்களிலிருந்து மொத்தம் 49 உறுப்பினர்கள் மற்றும் இயந்திரங்கள் ஆகியவற்றுடன் மூத்த ஆபரேஷன்ஸ் கமாண்டர் ஜைனஸ்ரி ஜைனலின் தலைமையில் தீயணைப்புக் குழு அனுப்பி வைக்கப்பட்டது.
அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தவுடன், 70×50 சதுர அடி அளவிலான வீடு 40 விழுக்காடு எரிந்துள்ளது என்றும், 70 வயதான எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.
தீ ஏற்பட்டதற்கான காரணம் மற்றும் இழப்பீடு தொடர்பில் விசாரணைகளை போலீசார் முன்னெடுத்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.