1 வயது பெண் குழந்தையை கடத்த முயன்ற இரு வெளிநாட்டவர் கைது

கிள்ளானில் உள்ள பல்பொருள் அங்காடியில் ஒரு வயது சிறுமியை அவரது தாயிடமிருந்து கடத்த முயன்ற இரண்டு வெளிநாட்டவர்களை போலீசார் நேற்று கைது செய்ததாக கிள்ளான் உத்தாரா காவல்துறை தலைவர் எஸ் விஜய ராவ் தெரிவித்தார். இரவு 7.30 மணியளவில் நடந்த சம்பவத்தின் போது, ​​குழந்தை தனது தாய் மற்றும் அத்தையுடன் சூப்பர் மார்க்கெட்டில் உள்ள எஸ்கலேட்டரில் இருந்துள்ளார்.

அப்போது திடீரென பின்னால் வந்த இருவர், அவர்களில் ஒருவர் குழந்தையை பிடித்து இழுத்துள்ளார். தாய் உதவி கேட்டு சத்தம் போட்டு தன் குழந்தையைப் பிடித்துக் கொண்டார். இருவரும் சம்பவ இடத்தில் இருந்து தப்பிக்க முயன்றனர். ஆனால் பொதுமக்களால் சுற்றி வளைக்கப்பட்டு பின்னர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர் என்று ராவ் இன்று இங்கே ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

25 மற்றும் 30 வயதுடைய இரண்டு சந்தேக நபர்களும், குற்றவியல் சட்டத்தின் 363ஆவது பிரிவின் கீழ் கடத்தல் தொடர்பான விசாரணைகளுக்கு உதவுவதற்காக மூன்று நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றார். தகவல் தெரிந்த பொதுமக்களை கிள்ளான் உத்தாரா காவல்துறை தலைமையகம் அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here