நீங்கள் யார் எங்கள் சமயத்தை குறை கூறுவதற்கு? ஸம்ரி வினோத்தை சாடிய தங்க கணேசன்

பல ஆண்டுகளாக இந்து சமயத்தை இழிவுப்படுத்துவோர் மீது அரசாங்கமும் காவல் துறையும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சாலை போராட்டத்தில் இறங்குவோம் என்று மலேசிய இந்து சங்கத்தின் தேசியத் தலைவர் சங்கபூஷண் தங்க கணேசன் கேட் டுக் கொண்டார். எங்கள் சமயத்தை குறித்து யாரும் பேச வேண்டாம் ஸம்ரி வினோத் திற்கு எச்சரிக்கை விடுத்ததோடு அவ்வாறு பேசியவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மூவின மக்கள் வாழும் இந்நாடு சுபிட்சமாக இருக்க விரும்புகிறோம். ஆனால் அந்த சூழலை அரசாங்கமும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர் வலி யுறுத்தினார். எப்படி உங்கள் சமயத்தை நாங்கள் மதிக்கிறோமா அதே போல் எங்கள் சமயத்தை நீங்கள் மதிக்க கற்று கொள்ளுங்கள். இதுவரை 80 போலீஸ் புகார்களை செய்திருக்கிறோம். ஆனால் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது இந்துகளின் மனத்தை புண்படும் வகையில் இருக்கிறது.

இவ்வேளையில் நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்தை எழுப்பிய ராயர், கணபதி ராவ், செனட்டர் சிவராஜ், செனட்டர் லிங்கேஸ்வரன் ஆகியோருக்கு நன்றி தெரி வித்துக் கொள்கிறோம். மேலும் மாமன்னருக்கு மகஜர் வழங்கவிருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் துணைத்தலைவர் ரிஷிகுமார் கூறுகையில் நாங்கள் எதை வணங்கினால் நீங்கள் (ஸம்ரி வினோத்) ஏன் கவலைப்படுகிறீர்கள். நீங்கள் எங்கு இருந்தீர்கள் என்பதை சற்று யோசியுங்கள் என்றார். மடானி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது இந்தியர்களுக்கு நம்பிக்கை இருந் தது. ஆனால் இது போன்ற நிகழ்வுகளை பார்க்கும்போது நாங்கள் நம்பிக்கையை இழந்து வருகிறோம்.

இந்து ஒற்றுமை சங்கத்தின் ஆலோசகர் ராஜரத்தினம் உரையாற்றுகையில் நான் உருவ வழிப்பாட்டை வணங்குகிறோம். அது எங்கள் விருப்பம். எங்களின் 63 நாயன் மார்களும் கடவுளை நேரில் பார்த்தவர்கள் என்று கூறுவதில் பெருமையடை கிறோம். மடானி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது அனைவரும் மலேசியர்கள் என்று தெரிவித் தனர். ஆனால் தற்போது மாற்றாந்தாய் பிள்ளைகளை போல் நடத்தப்படுகிறோம்.

நமது சமய உணர்வை தூண்டுபவர்கள் மீது நாம் குறை கூறுவதால் எந்த பயனும் இல்லை. ஏனெனில் அரசாங்கம் அவர்களுக்கு ஆதரவு அளித்து வருவதால் அவர்கள் தைரியமாக உலாவி வருகின்றனர் என்று அனைத்துலக மனித உரிமைக்கழகத்தின் தலைவர் சசிகுமார் தெரிவித்தார். வரும் மே மாதம் 7 ஆம் தேதி  மேல்முறையீடு நீதி மன்றத்தில் வழக்கு நடைபெறவுள்ளது. இந்த வழக்கில் நாம் வெற்றி பெறவில்லை என்றால் நம் சமயத்தை இழிவுப்படுத்துபவர்கள் நடவடிக்கை எடுக்க முடியுமா என்பது கேள்விக்குறியே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here