அரசியலில் குதித்த நடிகர் சிவக்குமார்.. விசிக வேட்பாளருக்கு வெளிப்படை ஆதரவு

சென்னை: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நடிகர் சூர்யாவின் தந்தையான நடிகர் சிவக்குமார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிக்குமாரை வெற்றி பெற வைக்க வேண்டும் என ஆதரவு கடிதம் எழுதி உள்ளார். தமிழ்நாட்டுக்கும், சினிமா துறைக்கும் நெருக்கமான தொடர்பு உள்ளது. சினிமாவில் ஜொலித்த எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் முதல்வர் பதவியை எட்டிப்பிடித்தனர். நடிகர் விஜயகாந்த் எதிர்கட்சி தலைவர் பதவி வரை சென்றார். மேலும் பல நடிகர், நடிகைகள் எம்பி, எம்எல்ஏக்களாக இருந்துள்ளனர்.

நடிகர் சரத்குமார், கமல்ஹாசன் உள்பட பல நடிகர்கள் கட்சியை தொடங்கினர். சமீபத்தில் நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கினர். இப்படி திரையுலகத்தை சேர்ந்தவர்கள் அரசியலில் கால்பதித்து வரும் நிலையில் தான் நடிகர் சூர்யாவின் குடும்பம் மட்டும் விலகியே உள்ளது. இந்நிலையில் தான் நடிகர் சூர்யா மற்றும் நடிகர் கார்த்தியின் தந்தையான நடிகர் சிவக்குமார் விழுப்புரம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின்வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் ரவிக்குமார் வெற்றி பெற அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலம் தனித்து நின்றாலும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுக்கும் ரவிக்குமார் போன்றவர்களை தமிழ் மக்கள் தேர்வு செய்துபார்லிமெண்ட்டுக்கு அனுப்ப வேண்டும் என பொதுமக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

ஜெய்பீம் படத்தின்போது சூர்யாவுக்க எதிராக பாமக கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்த வேளையில் நடிகர் சூர்யாவின் குடும்பத்துக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இருந்தது. இத்தகைய சூழலில் நடிகர் சிவக்குமார் விழுப்புரம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து கடிதம் எழுதியுள்ளார். வரும் லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் போட்டியிடுகிறது. திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம் என 2 தனி தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2019 தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சிதம்பரத்தில் தொல் திருமாவளவனும், விழுப்புரத்தில் ரவிக்குமார் ஆகியோர் வெற்றி பெற்றிருந்தனர். இந்த முறையும் அதே தொகுதிகள் விசிகவுக்கு கிடைத்துள்ள நிலையில் மீண்டும் தொல் திருமாவளவன், ரவிக்குமார் களமிறங்கி உள்ளனர்.

இந்த லோக்சபா தேர்தலில் விசிக தேர்தல் ஆணையத்தில் பானை சின்னம் கேட்டு விண்ணப்பம் செய்தது. கடந்த 2019 லோக்சபா தேர்தலில் திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு 2021 சட்டசபை தேர்தலில் விசிக வேட்பாளர்கள் பானை சின்னத்தில் போட்டியிட்டனர். இத்தகைய சூழலில் மீண்டும் பானை சின்னம் கேட்ட நிலையில் விசிகவுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கவில்லை. இதனால் விசிக வேறு சின்னத்தில் போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் நடிகர் சிவக்குமார் விழுப்புரம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து கடிதம் எழுதியுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here