ஜோகூர் பொழுதுபோக்கு மையத்தில் சோதனை; 54 வெளிநாட்டுப் பெண்கள் உட்பட 63 பேர் கைது

ஜோகூர் பாரு:

தாமான் மவுண்ட் ஆஸ்டினில் உள்ள பொழுதுபோக்கு மையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 54 வெளிநாட்டு பெண்கள் உட்பட 63 பேர் கைது செய்யப்பட்டனர்.

நள்ளிரவு நடத்தப்பட்ட சோதனையின்போது, சந்தேக நபர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டதாக ஜோகூர் குடிநுழைவுத் துறை இயக்குனர் பஹாருடின் தாஹிர் தெரிவித்தார்.

“அவர்கள் அனைவரும் 19 முதல் 49 வயதுடையவர்கள் என்றும், மூவர் உள்நாட்டினர், ஏனைய 60 பேர் வெளிநாட்டினர் என்றும் அவர் கூறினார்.

அவர்களில் 54 பெண்களும் வியட்நாம் , தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படுகிறது” என்று, இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“இந்தப் பெண்களின் வேலை அவர்களின் வாடிக்கையாளர்களுடன் சேர்ந்து அவர்களுடன் மது அருந்துவது என்றும், வாடிக்கையாளர்கள் செய்யும் ஒவ்வொரு ஆர்டருக்கும் அவர்களுக்கு RM20 கமிஷன் வழங்கப்படும் என்றும். விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவர்கள் தங்கள் விசா அனுமதியை தவறாக பயன்படுத்தியவும், சிலர் குடிநுழைவுச் சட்டங்களை மீறியதற்காகவும் கைது செய்யப்பட்டதாக பஹாருதீன் கூறினார்.

மேலும் மூன்று உள்ளூர்வாசிகள்ஆவணமற்ற புலம்பெயர்ந்தோருக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக 1959/63 குடியேற்றச் சட்டம் பிரிவு 56(1)(d)இன் கீழ் விசாரிக்கப்படுவதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here