அவசரப் பாதையில் நின்று கொண்டிருந்த கார் மீது மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலி

ஜோகூரில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 31) வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின்  கிலோமீட்டர் 116.9 இல் அமைந்துள்ள அவசரப் பாதையில் நின்று கொண்டிருந்த கார் மீது மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்தார். ஹரியான் மெட்ரோவின் அறிக்கையின்படி, பாதிக்கப்பட்ட 35 வயதான முகமது ஃபரேத் ஜகாரியா அயர் ஹிட்டாமில் இருந்து பாகோவுக்குச் சென்று கொண்டிருந்தார் என்று பத்து பஹாட் மாவட்ட காவல்துறையின் செயல் தலைவர் ஷாருலானுவார் முஷாதத் அப்துல்லா சானி கூறினார்.

பிற்பகல் 3 மணியளவில் சம்பவத்தின் போது, ஓட்டுநர் தொலைபேசி அழைப்பிற்கு பதிலளித்ததால், அவசர பாதையில் கார் ஒன்று நின்றதாக ஷாருலானுார் கூறினார். பாதிக்கப்பட்டவரால் மோதலை தவிர்க்க முடியவில்லை. அதனால் அவர் கார் மீது மோதினார். மோதியதில் பாதிக்கப்பட்டவருக்கு தலையில் பலத்த காயங்கள் மற்றும் இரண்டு கைகள் உடைந்தன என்று அவர் கூறினார்.

35 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மூவாரில் உள்ள சுல்தானா பாத்திமா சிறப்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இரவு 7.50 மணியளவில் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் கார் ஓட்டுநர் பாதுகாப்பாகவும், காயமின்றியும் தப்பினார். இந்த சம்பவம் குறித்து போலீசார் இன்னும் விசாரித்து வருகின்றனர். மேலும் சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 41(1) இன் படி வழக்கு விசாரணை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here