கெடா மாநில கராத்தே பயிற்சி மாணவர்கள் உற்சாக  ஈடுபாடு

(கே. ஆர். மூர்த்தி)

கூலிம், ஏப். 1-

கெடா மாநில கராத்தே கழகத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டு வரும் தங்கத்தை  நோக்கி கராத்தே பயிற்சியில் மாணவர்கள் உற்சாகத்துடன் பயிற்சி பெற்று வருவதாக கெடா மாநில கராத்தே கழகத்தின் செயலாளர் பெ. செல்வராஜூ தொரிவித்தார்.

கெடா மாநில கராத்தே கழகம் கடந்தாண்டு நவம்பர் மாதம் தங்கத்தை நோக்கி  கராத்தே பயிற்சியை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது. இதன் அறிமுக விழா கூலிம், கெலாடி, தாமான் நெனாசில் அமைந்துள்ள விஸ்மா கராத்தேவில் நடைபெற்றது.

இந்த தங்கத்தை நோக்கி பயிற்சி கூலிம் மாவட்டத்தில் விஸ்மா கராத்தேவிலும்,  கோலமூடா மாவட்டத்தில் சரஸ்வதி தமிழ்ப்பள்ளியிலும் முறையே நடத்தப்பட்டு வரும் வேலையில் இதில் பல மாணவர்கள் பங்கேற்று வருகின்றார்கள்.

தங்கத்தை நோக்கி திட்டத்தின் கீழ் இதன் முதல் கட்ட பயிற்சி தாமான் செலாசேவில் அமைந்துள்ள கூலிம் மாவட்ட நகராண்மைக் கழகத்திற்கு சொந்தமான டேவான் புத்ராவில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

கெடா மாநில கராத்தே கழகத்தின் தலைவர் மாஸ்டர் எஸ். ஸ்டாலின் தலைமையில் நாடறிந்த கராத்தே மாஸ்டரும் மலேசியா ஓகினோவா கோஜூ ரியோ சம்மேளத்தின் தேசிய தலைவருமான மஹாகுரு கே. ஆனந்தன் முன்னிலையில்  நடைபெற்றது.

இதில் 50க்கும் மேற்பட்ட மானவர்கள் கலந்துகொண்டு தங்கள் முழுமையான திறமைகளை வெளிப்படுத்தி பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.அதேபோல் இதன் இரண்டாம் கட்ட பயிற்சி விஸ்மா கராத்தேவில் நடைபெற்றது. இப்போட்டியிலும் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துக்கொண்டு பல பதக்கங்களை வென்றுள்ளனர்.

இத்திட்டத்தில் பங்கு பெற்று வரும் மாணவர்களுக்கு, கெடா மாநில கராத்தே கழகத்தின் தலைமை பயிற்றுநர் கோஷி ப. தியாகராஜன், பயிற்றுனர் கோஷி எம். விஜேய், சென்சேய் பெருந்தேவி, சென்சேய் சீதாலெட்சுமி ஆகியோர் சிறப்பான முறையில் பயிற்சியை வழங்கி வருகின்றார்கள்.

இந்த பயிற்றுநர்கள் வழங்கி வரும் பயிற்சியின் மூலம் இத்திட்டத்தில் பங்கு பெற்று வரும் பல மாணவர்கள் இவ்வாண்டு நடைபெறவுள்ள சுக்மா (சரவாக்)2024 போட்டியில் பங்கு பெற வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

அந்தவகையில் சிறப்பான முறையில் கராத்தே பயிற்சியை மேற்கொண்டு வரும் மாணவர்கள் சுக்மா 2024 போட்டிக்கு தங்கத்தை நோக்கிச் சென்று தங்கத்தோடு திரும்பி இம்மாநிலத்திற்கும் மாநில கராத்தே கழகத்திற்கும் பெருமை சேர்ப்பர் என்று கெடா மாநில கராத்தே கழகம் பெரிதும் எதிர்பார்ப்பதாக பி. செல்வராஜு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here