நேற்று முன்தினம் நடைபெற்ற 2024 லிவர்புல் கிரிக்கெட் கிளப் பொது ஸ்குவாஷ் போட்டியில் தேசிய ஆடவர் பிரிவு ஸ்குவாஷ் விளையாட்டாளர் சி. அமிஷேன் ராஜ் வாகை சூடினார்.
அவர் இப்போட்டியின் இறுதி ஆட்டத்தில் செக் குடியரசைச்சேர்ந்த விளையாட்டாளரை எதிர்கொண்டார். சுமார் 32 நிமிடங்களுக்கு நடைபெற்றது. அதில் அமிஷேன் ராஜ் 11 -6, 11- 3, 11-5 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம் இவர் போட்டிகளில் வாகை சூடுவது இரண்டாவது முறையாகும்.
தற்போது 20 வயதான அமிஷேன் ராஜ் உலகத்தர வரிசையில் 134ஆவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.








