வீட்டு வாசலில் கார் மோதியதில் மூதாட்டி மரணம்

கோத்தா கினாபாலு:

மூதாட்டி ஒருவர் ஓட்டிவந்த கார் வீட்டு வாசலில் மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் நேற்று மதியம் 1.30 மணியளவில் லாஹாட் டத்துவில் நிகழ்ந்ததாக அம்மாவட்ட காவல்துறை தலைவர் துணை ஆணையர் டாக்டர் ரோஹான் ஷா அகமட் கூறினார்.

பாதிக்கப்பட்ட 70 வயது மூதாட்டி சம்பவ இடத்தில் இறந்துவிட்டதாகவும், விபத்துக்கான காரணத்தை கண்டறிய அவரது சடலம் அங்குள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

கவனக் குறைவாகவும், அபாயகரமாகவும் வாகனம் ஓட்டு மரணம் விளைவித்ததற்காக சாலை போக்குவரத்து சட்டம் 1987 இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுவதாக அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here