சக நடிகரை கேலி செய்த பாலிவுட் நடிகர்;மனைவி எடுத்த விபரீத முடிவு!

படப்பிடிப்புத் தளத்தில் விளையாட்டாக சகநடிகர் குறித்து அவர் மனைவியிடம் கேலி செய்திருக்கிறார் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன். இதனையடுத்து, அந்த நடிகரின் மனைவி தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். இந்த சம்பவத்தால் பதறிப் போயிருக்கிறார் நடிகர் அஜய் தேவ்கன்.

பாலிவுட்டில் ‘போலா’, ‘த்ரிஷ்யம் 2’ போன்ற பல படங்களைக் கொடுத்தவர் நடிகர் அஜய் தேவ்கன். இவரது நடிப்பில் சமீபத்தில் ‘சைத்தான்’ படம் வெளியாகி ரூ. 100 கோடிக்கும் அதிக வசூலைப் பெற்றது. இப்படியான சூழ்நிலையில்தான் முன்பு படப்பிடிப்புத் தளம் ஒன்றில் நடந்த மறக்க முடியாத சம்பவம் ஒன்றைத் தனது சமீபத்திய நேர்காணலில் பகிர்ந்துள்ளார் நடிகர் அஜய் தேவ்கன்.

அதாவது, “என்னுடன் நடித்த சக நடிகர் ஒருவருக்கு அப்போதுதான் புதிதாக திருமணம் நடந்திருந்தது. வெளியூரில் நடந்து கொண்டிருந்த படப்பிடிப்புத் தளத்திற்கு அவர் தனது மனைவியை அழைத்து வந்திருந்தார். அவரது மனைவிக்கும் சினிமாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதுபோல, படப்பிடிப்பை பார்ப்பது அவருக்கு அதுதான் முதல் முறை” என்றார்.

மேலும், “அப்போது பெரும்பாலும் நைட் ஷூட்தான். இதனால், பகல் பொழுதில் அந்த நடிகரது மனைவியிடம் நான் கேலியாக, ’உன் கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது. அதனால்தான் அவர் இரவில் வேறு பெண்ணை சந்தித்து விட்டு, பகலில் உன்னை சந்திக்கிறார். நாங்கள் எல்லாம் இரவில் 10.30 மணிக்கெல்லாம் ஷூட் முடித்து விடுவோம்’ என்று சொன்னேன். அதை முதலில் அவர் நம்பவில்லை என்றாலும் தொடர்ந்து ஒரு வாரமாக இதையே அவரிடம் சொல்லிக் கொண்டிருந்தோம்.

சரியாக எட்டாவது நாள் அவர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. நாங்கள் சொன்ன இந்த பொய்யை ஒருக்கட்டத்தில் அவர் உண்மை என நம்பி, கணவருடன் சண்டை போட்டு இந்த முடிவை எடுத்திருக்கிறார். இதைக் கேட்டதும் நாங்கள் அதிர்ச்சியாகிவிட்டோம். எவ்வளவு பெரிய தவறு செய்திருக்கிறோம் என்பதை உணர்ந்து, பின்பு அந்தப் பெண்ணிடம் மன்னிப்பு கேட்டு நடந்தவற்றை விளக்கினோம்” என்று அவர் கூறினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here