நயன்தாராவின் ஹீரோ யார் தெரியுமா.?: விக்கி கிடையாது.. வைரலாகும் பதிவு.!

தமிழ் திரையுலகில் உச்ச நடிகையாக கலக்கி கொண்டிருப்பவர் நயன்தாரா. இவரும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் தற்போது நட்சத்திர ஜோடிகளாக திரையுலகில் வலம் வருகின்றனர். இந்நிலையில் நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஹீரோயினாக வலம் வருபவர் நயன்தாரா. தற்போதும் முன்னணி நடிகையாக திகழும் இவர் கதாநாயகிகளை மையப்படுத்தி உருவாகும் படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். சமீப காலமாக இவரின் நடிப்பில் வெளியாகும் படங்கள் எதுவும் பெரியளவில் பாக்ஸ் ஆபிஸில் வரவேற்பை பெறுவதில்லை.

ஆனாலும் தொடர்ச்சியாக இவரை தேடி பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இதனிடையில் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வரும் நயன்தாரா, தனது குடும்பத்துடன் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவதை அவர் வழக்கமாக கொண்டுள்ளார். அவ்வாறு நயன்தாரா பகிரும் பதிவுகள் அனைத்தும் இணையத்தில் கவனம் ஈர்க்கும்.

இந்நிலையில் தற்போது நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ள பதிவு வைரலாகி வருகிறது. அதில் சிறு வயதில் தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அதில், ‘ஹாப்பி பர்த்டே. எனது ஹீரோ, எப்போதும் என்னுடைய லவ். ஐ லவ் யூ அச்சா’ எனக்குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here