ஆடு ஜீவிதம் படக்குழுவுக்கு பாலிவுட் திரை பிரபலங்கள் பாராட்டு

கடந்த சில மாதங்களாகவே மலையாள சினிமாவின் புகழ் உச்சியில் இருக்கிறது. அதை தொடரும் விதமாக மார்ச் 28 ஆம் தேதி பிளெஸ்சி இயக்கத்தில் பிருத்விராஜ் , அமலாபால் நடிப்பில் வெளிவந்த படம் ஆடு ஜீவிதம். இப்படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு உண்டாகியது. படத்தை பார்த்துவிட்டு பலப் பிரபலங்கள் படத்தை பாராட்டி வருகின்றனர்.

பிருத்விராஜ் இப்படத்திற்காக உடல் எடையை குறைத்து நடித்துள்ளார் மேலும் இப்படத்தில் வரும் ஒரு காட்சிக்காக மூன்று நாட்கள் பட்டினி கிடந்து நடித்திருக்கிறார். ஆடு ஜீவிதம் படம் மலையாள சினிமாவில் நீண்ட நாட்கள் எடுக்கப்பட்ட படமாகும் . இதற்கெல்லாம் சேர்த்து பலனாக படத்தின் வெற்றி உச்சத்திற்கு சென்றிருக்கிறது.

படம் வெளியாகி முதல் நாளிலயே 7.5 கோடி இந்தியாவில் வசூலித்துள்ளது. மலையாளத் திரையுலகில் இதுவரை அதிகமாக வசூலித்த படங்களின் பட்டியலில் 6 ஆவது இடத்தை பெற்று இருக்கிறது ஆடு ஜீவிதம்.

மலையாள சினிமாவில் அதிகம் வசூலித்த ஆர்.டி.எக்ஸ், நேரு, பீஷ்மபரவம் போன்ற படத்தின் ஒட்டுமொத்த வசூலையும் ஆடு ஜீவிதம் படம் 7 நாட்களில் வசூலித்திருப்பது குறிப்பிடத்தக்கது. படத்தை படக்குழுவினர் நேற்று இந்தி சினிமாவின் முக்கிய பிரபலங்களுக்கும், முக்கிய இயக்குனர்களுக்கும் திரையிட்டனர். படத்தைப் பார்த்த பிரபலங்கள் ஆடு ஜீவிதம் படக்குழுவினரிடம் பாராட்டு மழையை பொழிந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here