4 சக்கர வாகனம் மோதி இரு உடன்பிறப்புகள் பலி

ஈப்போ  38.9 கி.மீட்டர் ஜாலான் ஈப்போ – கோல கங்சாரில் இன்று நான்கு சக்கர இயக்கி (4WD) வாகனம் மோதியதில் இரண்டு உடன்பிறப்புகள் இறந்தனர். SMK சிம்பாங் பெலூருவுக்குச் சென்று கொண்டிருந்த 13 மற்றும் 17 வயதுடைய இரு உடன்பிறப்புகள் பலியானதாக சுங்கை சிப்புட் காவல்துறைத் தலைவர் கைசம் அஹ்மத் ஷஹாபுடின் தெரிவித்தார்.

காலை 7.12 மணியளவில் கோல கங்சார் திசையில் இருந்து நான்கு சக்கர வாகனம் தாமான் டேசா சலாக்கை நோக்கி வலப்புறம் திரும்பி எதிர் திசையில் வந்த அவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது என்று அவர் கூறினார். உடல்கள் பிரேத பரிசோதனைக்காக சுங்கை சிப்புட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிய சாரதியை போலீசார் தேடி வருவதாகவும் இந்த சம்பவம் குறித்து யாரும் புகார் வழங்கவில்லை என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here