வீட்டில் ஏற்பட்ட தீயில் சிக்கி உயிரிழந்த முதியவர் – கிள்ளானில் சம்பவம்

கிள்ளான் பத்து 9,  ஜாலான் கெரெத்தாபி லாமாவில் உள்ள C வகுப்பு சி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில்  முதியவர் ஒருவர் உயிர் இழந்தார். அவரது சகோதரர் உயிர் தப்பினார். சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் கூறுகையில், இரவு 10.26 மணிக்கு ஒரு பேரிடர் அழைப்பு வந்தது. இரவு 11.23 மணியளவில் தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து அந்த இடத்தில் உள்ள மரக்கட்டைகளுக்கு அடியில் 79 வயது முதியவரின் உடலை தீயணைப்பு வீரர்கள் கண்டுபிடித்ததாகவும் அவர் கூறினார்.

தீ முழுமையாக அணைக்கப்பட்ட பிறகு, மதிப்பிடப்பட்ட சேதம் சுமார் 90% ஆகும். அதிர்ஷ்டவசமாக, பொதுமக்களால் ஒரு முதியவர் காயமின்றி மீட்கப்பட்டார் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார். காப்பார், சுங்கை பினாங் மற்றும் கோத்தா ராஜா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களில் இருந்து 15 பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் மூலம் சுமார் 20 நிமிடங்களில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்றார். தீ விபத்துக்கான காரணத்தை கண்டறியவும், சேதத்தின் அளவை மதிப்பிடவும் விசாரணைகள் நடந்து வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here