பிலிப்பைன்சில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் கடற்படை விமானிகள் இருவர் பலி!

மணிலா:

பிலிப்பைன்ஸ் நாட்டின் கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் இன்று (ஏப்ரல் 11) விழுந்து நொறுங்கியதில், அதில் இருந்த இரண்டு விமானிகள் மாண்டதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்தது.

அந்த இரு விமானிகளும் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

காயமடைந்த விமானிகள் மருத்துவமனைக்கு உடனடியாகக் கொண்டு செல்லப்பட்டனர்.

ஆனால் அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி மாண்டதாக பிலிப்பைன்ஸ் கடற்படை கூறியது.

இதுகுறித்து விசாரணை நடத்தப்படுகிறது என்றும் அது தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here