அமெரிக்கா: அஞ்சல் ஓட்டப்பந்தய போட்டியில் முகமட் அஸிமிற்கு  தங்கம்

அமெரிக்கா ஃபோரிடாவில், அஞ்சல் ஓட்டப்பந்தய போட்டியில், நாட்டின் தேசிய ஓட்டப்பந்தய வீரர் முஹமட் அஸிம் முஹமட் ஃபாமி தங்கம் வென்றுள்ளார்.

 என்சிஏஏ எனும் தேசிய கல்லூரி ஓட்டப்பந்தய சங்கம் நடத்திய இந்த போட்டியில், தனது அதிவேக ஓட்டத்தால் அவர் தமது குழுவை வெற்றியடைச் செய்துள்ளார்.

அமெரிக்காவின் ஆர்பன் பல்கலைக்கழகத்தில், படித்துக் கொண்டிருக்கு அஸிம் அங்குள்ள தடகள போட்டியில், அப்பல்கலைக்கழகம் தங்கம் வெல்வதற்கு துணை புரிந்திருக்கின்றார்.

அந்த அஞ்சல் ஓட்டத்தை 38.64 வினாடிகளில் ஓடி முடித்தன் மூலம், அவர் தமது அணிக்கு முதலிடம் பிடித்து தங்கம் வென்று தந்துள்ளார்.

அதோடு, 20 வயதான அஸிம் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தையும் 10.44 விநாடிகளில் முடித்து 75 போட்டியாளர்களில் 22 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

இதன் வழி, 100 மீட்டர் ஓட்டப் போட்டியில், ஆர்பன் பல்கலைக்கழகத்தின் இரண்டாவது ஓட்டப்பந்தய வீரராகவும் அவர் தேர்வாகி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here