ரவாங்:
ரவாங்கின் புக்கிட் செந்தோசாவிலுள்ள ஒரு மளிகைக் கடையில் பாராங் கத்தியைக் காட்டி, மிரட்டி கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் இந்திய ஆடவர் ஒருவரை காவல்துறை தேடி வருகிறது.
தலையை மூடியவாறும், முகமூடி மற்றும் நீல நிற டி-சேர்ட் அணிந்திருந்த அந்த ஆடவர் பாராங் கத்தியுடன் மளிகை கடைக்குள் நுழைந்ததாகவும், அவர் அங்கிருந்த பண இயந்திரத்தை உடைத்து, அதனுள் இருந்த முந்நூறு ரிங்கிட்டை கொள்ளையடித்ததார் என்று, உலு சிலாங்கூர் மாவட்ட காவல்துறை துறை தலைவர் துணை சூப்ரிடென்டன்ட் முஹமட் அஸ்ரி கூறினார்.
மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை 12.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாகவும், கொள்ளையன் ரொக்கப்பணத்துடன் சேர்த்து புகார்தாரரின் இரு கைப்பேசிகளையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளான் என்றும் அவர் கூறினார்.
சம்பவத்தின் பின்னர் அக்கொள்ளையன் கறுப்பு நிற காரில் தப்பியோடியதாகவும், இந்த சம்பவத்தால் மளிகை கடைக்கு 3,800 ரிங்கிட் இழப்பு ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.
இவ்வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 392/397 யின் கீழ் விசாரிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.





















