மலேசிய பொதுப் பல்கலைக்கழகத்தின் 27ஆவது பட்டமளிப்பு விழா.

கோலாலம்பூர்:

ண்மையில் நடைபெற்ற மலேசிய பொதுப் பல்கலைக்கழகத்தின் 27ஆவது பட்டமளிப்பு விழாவில் 90 வயதான கிருஷ்ணன் எம்பிஏ துறையில் பட்டம்பெற்று கல்விக்கு வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபித்துள்ளார்.

இந்த பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற மிக வயதான மாணவர் என்ற பெருமையையும் கிருஷ்ணன் பெற்றுள்ளார். இதன் அடிப்படையில் அவருக்கு வாழ்நாள் கற்றல் விருதும் வழங்கப்பட்டது. மலேசிய பொது பல்கலைக்கழகத்தின் வேந்தர் அஸ்மான் ஹஷிம் இந்த விருதினை கிருஷ்ணனுக்கு எடுத்து வழங்கினார்.

65 வயதுக்குமேல் கல்வியில் சிறந்த தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகின்றது. கிருஷ்ணன் முன்னதாக இடைநிலைப்பள்ளியின் தலைமையாசிரியராக பணியாற்றியுள்ளார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக கற்றல் அனுபவத்தை கொண்டிருக்கும் அவர் தமது 77ஆவது வயதில் மலேசிய பொது பல்கலைக்கழகத்தில் கணக்கியல் துறையில் இளங்கலை பட்டம் பயிலத் தொடங்கினார்.

கடந்த 2017ஆம் ஆண்டு அவர் அந்த பாடத்திட்டத்தில் இளங்கலை பட்டம்பெற்றார். அதோடு தமது கல்விப் பயணைத்தை நிறுத்தாமல் கிருஷ்ணன் இதே பல்கலைக்கழகத்தில் எம்பிஏ எனப்படும் வர்த்தக மேலாண்மைத் துறையில் மாஸ்டர் கல்வி பயில தொடங்கினார். இந்நிலையில் எனக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். ஒருவர் சிரம்பானில் வழக்கறிஞராக பணியாற்றுகின்றார். மற்றொருவர் மருத்துவராக சொந்த கிளினிக் வைத்துள்ளார். இன்று பட்டம் பெறுவது எனக்கும் பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக கிருஷ்ணன் கூறினார்.

இதனிடையே இம்முறை பட்டமளிப்பு விழாவில் கோத்தாகினாபாலு சிறையில் தண்டனை எதிர்நோக்கிவரும் இருவர் மேலாண்மைத் துறையில் டிப்ளோமா பட்டம் பெற்றுள்ளனர். கடந்த 2009ஆம் ஆண்டு முதல் மலேசிய பொதுப் பல்கலைக்கழகம் சிறைக்கைதிகள் பயில்வதற்கு வாய்ப்பு வழங்கி வருகின்றது. இதுவரையில் 20 கைதிகள் பட்டம்பெற்றுள்ளனர்.

மேலும், 20 பேர் இன்னமும் கல்வி பயின்று வருகின்றனர். இதற்கிடையே அக்டோபர் 14ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதி வரையில் 7 பிரிவுகளை நடத்தப்பட்ட பட்டமளிப்பு விழாவில் 5,260 மாணவர்கள் பட்டம்பெற்றனர். கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் மலேசிய பொதுப் பல்கலைக்கழகம் ஏறத்தாழ 103,000 பட்டதாரிகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here