மனித வாழ்வியல் முறையை மேம்படுத்த பல்வேறு விதமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. நோய்களுக்கு மருந்து கண்டறிவது, உயிரியல் சார்ந்த ஆராய்ச்சி மேற்கொள்ளுவது என பல்வேறு விதமான ஆராய்ச்சிகளுக்கு ஆய்வு கூடங்களில் எலிகள் பயன்படுத்தப்படுகிறது. விஞ்ஞானிகளால் கண்டறியப்படும் மருந்துகள், முதற்கட்டத்தில் எலிகளுக்கு தரப்பட்டு ஆய்விற்கு உள்ளாக்கப்படும். இதன் மூலம், மருத்தின் செயல் திறனைக் கண்டறிய முடியும்.
அறிவியல் ஆராய்ச்சியின் தொடக்கம் முதல் தற்போது வரை இந்த முறை நடைமுறையின் இருந்து வருகிறது. மனித உயிர்களுக்கு ஏற்றால்போல், எலிகளின் உடற்கூறியல், உடலியல் மற்றும் மரபணு உள்ளது. மேலும் அதனின் எடை, குறுகியக் கால வாழ்க்கை சுழற்சி, எளிமையான பராமரிப்பு முறை போன்றவை உயிரியல் சார்ந்த அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு எலிகளை ஏதுவாக கண்டறிய காரணமாக அமைகிறது.
இந்நிலையில், இப்படி பல்லாயிரம் கணக்கில் ஆய்வுக் கூடங்களில் உயிரிழக்கும் எலிகளை நினைவுக்கூறும் அல்லது கெளரவிக்கும் வகையில், ரஷ்ய நாட்டில் சிலை வகைக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் நோவோசிபிர்ஸ்க் பகுதியில் அமைந்துள்ள, சைட்டாலஜி மற்றும் மரபியல் கல்வி நிறுவனத்தில்தான் இந்த எலி சிலை வைக்கப்பட்டுள்ளது.
கண்களில் கண்ணாடி போட்டுக்கொண்டு, துணியை பின்னுவது போன்று கைகளில் ஊசியுடன் டிஎன்ஏ-வை பின்னுவதுபோல் வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகின் பல்வேறு விதமான காரணங்களுக்காக சிலைகள் வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த எலியின் சிலை உலகளவில் கவனம் பெற்றுள்ளது.




















