உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – காங்கிரஸ் முதல்வர் ரேவந்த் ரெட்டி வலியுத்தல்

கடந்த ஆண்டு சனாதனம் குறித்த கருத்துகள் மக்களிடையே பரவலாக பேசப்பட்டு வந்தது. சனாதனத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் தங்கள் கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். சனாதனம் குறித்த சர்ச்சை இன்னும் முடிந்தபாடில்லை. தற்போது மீண்டும் சனாதனம் குறித்த கருத்து தலைதூங்க தொடங்கியுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பரில், சென்னையில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் பேசிய தமிழக அமைச்சர் உதயநிதி, “மலேரியா, டிங்கு நோய்கள் போல சனாதனமும் ஒழிக்கப்பட வேண்டும்.” எனக் கூறினார். இதனை எதிர்த்து பல்வேறு தரப்புகளில் இருந்தும் உதயநிதி மீது வழக்கு தொடர்ப்பட்டது. அனைத்து வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து நடத்த வேண்டும் என உதயநிதி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்னும் விசாரணையில் உள்ள நிலையில் மீண்டும் இதுகுறித்த சர்ச்சை எழுந்துள்ளது.

தெலுங்கானா முதலமைச்சரும் அம்மாநில காங்கிரஸ் தலைவருமான ரேவந்த் ரெட்டி தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அப்போது உதயநிதியின் சனாதனம் குறித்த கேள்விக்கு பதில் அளித்தார். அதில், சனாதனம் குறித்த உதயநிதியின் பேச்சு தவறானது. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தெலங்கானா முதலமைச்சராகவும் மாநில காங்கிரஸ் தலைவராகவும் உதயநிதியின் பேச்சு தவறானது என கூறுகிறேன். அவர் இதற்கு கண்டிப்பாக பொறுப்பேற்க வேண்டும். அனைத்து மதங்களின் உணர்வுகளுக்கும் மதிப்பு அளிப்பதுடன், அவற்றிற்கு இடையூறு செய்யாமல் அனைத்து நம்பிக்கைகளையும் நிலைநிறுத்த வேண்டும் எனக் கூறினார்.

இந்த பதில் தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இந்தியா கூட்டணியில் உள்ள திமுக-வினை குறித்து காங்கிரஸ் கட்சியின் ரேவந்த் எதிர்மறையாக பேசியிருப்பது அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த கருத்து இந்தியா கூட்டணியில் பிளவி ஏற்படுத்துமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here