அம்பாங் அடுக்குமாடி குடியிருப்பின் கால்வாயில் விழுந்த 6 வயது சிறுவன் பாதுகாப்பாக மீட்பு

கோலாலம்பூர்:

அம்பாங்கின் புக்கிட் அந்தரபாங்சாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் வாய்க்காலில் விழுந்த ஆறு வயது சிறுவனை தீயணைப்பு வீரர்கள் வெற்றிகரமாக மீட்டனர்.

இந்த சம்பவம் இரவு 8.34 மணியளவில் நிகழ்ந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தகவல் கிடைத்ததும், பண்டான் இண்டா தீயணைப்பு வீரர்கள் ஆறு பேர் கொண்ட குழு, 4.57 மீட்டர் (15 அடி) ஆழமான கால்வாயிலிருந்து, தலையில் காயங்களுடன் சிறுவனை மீட்டது.

பின்னர் அவர் மேலதிக சிகிச்சைக்காக மருத்துவ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here