இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் அபார வெற்றியைப் பதிவு செய்தனர்.
அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் பிரிக்டோன் அணியைச் சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மென்செஸ்டர் சிட்டி அணியினர் 4-0 என்ற கோல் கணக்கில் பிரிக்டோன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மென்செஸ்டர் சிட்டி அணிக்காக பில் போடன் இரு கோல்களை அடித்தார். மற்ற கோல்களை கெவின் டி புருனே, ஜூலியன் அல்வாரேஸ் ஆகியோர் அடித்தனர்.