கோல குபு பாரு இடைத்தேர்தல்: நான்கு முனைப் போட்டி

உலு சிலாங்கூர்:

கோல குபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நடைபெற்றது.

அதற்கமைவாக வேட்புமனு தாக்கல் மையம், இன்று காலை 9 மணிக்கு திறக்கப்பட்டு சரியாக 10 மணிக்கு மூடப்பட்டது என்று தேர்தல் அதிகாரி யுஹானாஸ் ஆவ்ரி கமாருடின் தெரிவித்தார்.

இச்சட்டமன்றத் தொகுதியில் நான்கு முனை போட்டி நிலவுகிறது.

நம்பிக்கை கூட்டணி சார்பில் பாக் சோக் தாவ், தேசியக் கூட்டணி சார்பில் உள்ளூர் வேட்பாளர் கைரூல் அஸாரி ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

மேலும் சுயேட்சை வேட்பாளராகப் பெண் தொழில் முனைவர் ஞியாவ் கெ ஸின், மற்றும் மலேசிய மக்கள் கட்சி சார்பில் ஹஃபிஸா ஸைனுடின் ஆகியோர் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

40,226 வாக்காளர்கள் உள்ள கோல குபு பாரு சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் டிஏபியின் லீ கீ ஹியோங், கடந்த மார்ச் 21 அன்று புற்றுநோயால் மரணமடைந்ததை தொடர்ந்து அந்த இடம் காலியாகியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here