2 வாகனங்கள் மோதிய விபத்தில் மூவர் பலி, ஐவர் படுகாயம்

கோலக் கிராய்:

ஜாலான் கோல கிராய்-குவா மூசாங்கில் நேற்று நள்ளிரவு இரண்டு வாகனங்கள் மோதிய விபத்தில் மூவர் உயிரிழந்தனர், ஐவர் படுகாயமடைந்தனர்.

நள்ளிரவு 13.36 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் உயிரிழந்துள்ளதாக மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) கிளந்தான் மாநில செய்தித் தொடர்பாளர் கூறினார்.

சம்பவம் தொடர்பில் தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், உடனே தீயணைப்பு வீரர்கள் குறித்த இடத்தை அடைந்ததும், Toyota Hilux கார் ஃபோர்டு ரேஞ்சருடன் மோதி விபத்துக்குள்ளானதைக் கண்டதாகவும் அவர் கூறினார்.

பின்னர் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பிவைத்ததாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here