தமிழ் சினிமாவில் கடந்த நாற்பது ஆண்டுகளாக சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் தான் ரஜினி. குணச்சித்திர ரோல்களில் நடித்து பின்பு வில்லனாக மிரட்டினார் ரஜினி. அதன் பிறகு கமல் கூறியதன் காரணமாக ஹீரோவாக நடிக்க துவங்கினார் தலைவர். ஹீரோவாக ரஜினி நடிக்க துவங்கியதும் தமிழ் சினிமா ரசிகர்கள் அவரை கொண்டாட துவங்கினார்கள். தொடர் வெற்றிகளின் காரணமாக சூப்பர்ஸ்டார் அந்தஸ்த்தை அடைந்தார்.
அதுமட்டுமல்லாமல் அவரின் படங்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது. எனவே அவரின் ரசிகர்கள் பட்டாளமும் பெருகியது. இந்நிலையில் என்னதான் ரஜினிக்கு தற்போது 73 வயதானாலும் இன்றளவும் சுறுசுறுப்பாக பல படங்களில் நடித்து வருகின்றார். ஜெயிலர் படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை பெற்று வெற்றிப்பாதைக்கு திரும்பிய ரஜினி தற்போது ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து இப்படம் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவாகும் கூலி என்ற படத்திலும் நடிக்கவுள்ளார் ரஜினி. இப்படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி மாஸான வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ரஜினி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற பல படங்களில் மிகமுக்கியமான ஒரு திரைப்படம் தான் பாட்ஷா. இப்படம் தமிழ் சினிமாவிற்கு ஒரு ட்ரெண்ட்செட்டர் படம் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு இப்படம் ரசிகர்கள் மத்தியிலும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்படத்தில் பல ஹைலைட்டான காட்சிகள் இருக்கின்றன. அதில் ஒரு காட்சி தான் ஆனந்த்ராஜ் ரஜினியை கம்பத்தில் கட்டி வைத்து அடிக்கும் காட்சி.
இக்காட்சியை படமாக்கும் போது நடந்த சம்பவம் பற்றி இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா ஒரு பேட்டியில் பேசியிருந்தார். அவர் கூறியதாவது, பாட்ஷா படத்தில் இடம்பெற்ற அந்த கம்பத்தில் ரஜினியை கட்டிவைத்து அடிக்கும் காட்சியை படமாக்க துவங்கினோம். அந்த காட்சியை துவங்கும் முன்பு தயாரிப்பாளர் ஆர்.எம் வீரப்பன் எனக்கு போன் செய்திருந்தார். போனில் அவர், உடனே படப்பிடிப்பை பேக் அப் பண்ணிட்டு என் அலுவலகத்திற்கு வாங்க என கூறினார். நானும் அவரின் அலுவலகத்திற்கு சென்றேன்.
அப்போது இதுபோல ரஜினியை கம்பத்தில் கட்டிவைத்து அடிப்பதை போல காட்சியை எல்லாம் எடுக்க முடியாது. எம்.ஜி ஆர் எப்படியோ அதை போல தான் ரஜினியும். இதுபோல ஒரு காட்சியை திரையில் பார்த்தால் ரசிகர்கள் தியேட்டரை அடித்து நொறுக்கிவிடுவார்கள். மிகப்பெரிய ரிஸ்க்காக மாறிவிடும். எனவே இந்த காட்சி வேண்டாம் என்றாராம் ஆர்.எம் வீரப்பன். ஆனால் ரஜினியும் சுரேஷ் க்ரிஷ்ணானும் இந்த காட்சியின் முக்கியத்துவத்தை எடுத்து கூறியுள்ளனர். மேலும் இந்த காட்சி தான் மாணிக்கம் பாட்ஷாவாக மாற சிறந்த அடித்தளமாகவும் அமையும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.அதன் பிறகே தயாரிப்பாளர் ஆர்.எம் வீரப்பன் ஒரு மனதாக இந்த காட்சியை எடுக்க சம்மதித்தாராம்.இந்த தகவலை சுரேஷ் கிருஷ்ணா ஒரு பேட்டியில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது