தேசிய ஆண்கள் பிரிவு ஸ்குவாஷ் விளையாட்டாளர் சஞ்சய் ஜீவா நேற்று முன்தினம் பெர்மூடாவில் நடைபெற்ற 2024 பெர்மூடா பொது ஸ்குவாஷ் போட்டியில் வாகை சூடினார்.
இப்போட்டியின் இறுதியாட்டத்தில் அவர் கொலம்பியாவைச் சேர்ந்த அண்ட்ரேஸ் ஹெரேராவை எதிர்கொண்டார். சுமார் 45 நிமிடங்களுக்கு நடைபெற்ற இந்த இறுதி சுற்று ஆட்டத்தில் சஞ்சய் 11-7, 11-7, 11-3 என்ற புள்ளிகலை பெற்ரு வாகை சூடினார். இவர் ஏற்கெனவே இரு வாரங்களுக்கு முன் நடைபெற்ற 2024 ஆர்சி புரோ போட்டியின் காலிறுதிச் சுற்று ஆட்டத்தில் ஹெரேராவை வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த வெற்றி எனக்கு இன்பதிர்ச்சியை அளிப்பதக உலக தர வரிசையில் 76ஆவது இடத்தில் உள்ள சஞ்சய் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது அமெரிக்காவில் முகாமிட்டுள்ள சஞ்சய், உலக தரவரிசையில் முதல் 50 இடங்களுக்குள் வர இலக்கு கொண்டுள்ளார்.






