முதல்முறையாக விண்வெளியில் அறிமுகம் செய்யப்பட்ட 2023 உலக கோப்பை

13ஆவது உலக கோப்பை கிரிக்கெட் இந்தியாவில் நடக்கிறது. இந்த போட்டிகள் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெறுகிறது. உலக கோப்பை கிரிக்கெட்டில் 10 நாடுகள் பங்கேற்கின்றன.

போட்டியை நடத்தும் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து , ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 8 நாடுகள் நேரடியாக விளையாடுகின்றன. மீதமுள்ள அணிகளுக்கு தகுதிச்சுற்று ஆட்டம் நடைபெறும்.

இதில் வெற்றி பெறும் 2 அணிகள் உலக கோப்பையில் விளையாடும். இந்த போட்டிக்கான அட்டவணை இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒருநாள் உலக கோப்பை போட்டியை பிரபலப்படுத்த ஐசிசி புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.

உலகக் கோப்பையை பிரத்தியேக பலூனில் வைத்து பூமியில் இருந்து சுமார் 1.20 லட்சம் அடி உயரத்தில் வளிமண்டலத்தின் விளிம்பில் கோப்பை நிலை நிறுத்தப்பட்டது.

18 நாடுகளுக்குக் கொண்டு செல்லப்படும் கோப்பை வரும் செப்டம்பர் 4ஆம் தேதி மீண்டும் இந்தியாவுக்கு திரும்பும். முதல்முறையாக விண்வெளியில் அறிமுகம் செய்யப்பட்ட கோப்பை என்ற பெருமையை ஐசிசி ஒருநாள் உலக கோப்பை பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here