கோலாலம்பூர்:
ரேபிட்கேஎல் நிலையங்களில் இப்போது டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி பயண டிக்கெட்டுகளை வாங்க முடியும்.
இது தவிர மை50 மற்றும் மைசிட்டி டிராவல் பாஸ்களுக்கான சந்தா கட்டணங்களையும் டாப் அப் செய்யலாம் என்று Rapid Rail நிறுவனம் தெரிவித்துள்ளது.
பொதுப்போக்குவரத்தை ஊக்கிவிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிக்கு இந்த “புதிய கட்டண முறைகள்” உதவும் என்று தாம் நம்புவதுடன், RapidKL இன் வாடிக்கையாளர்கள் டிக்கெட் வாங்கும் செயல்முறையை எளிதாக்குவதற்கும் மேம்படுத்துவதற்கும் ஏதுவாக இருக்கும் என்று ” என்று அது நேற்று (ஏப்ரல் 30) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பயண டிக்கெட் வாங்குவதற்கு பாதுகாப்பான மற்றும் தடையற்ற பரிவர்த்தனையை அனுமதிப்பதால், பயணிகள் பணத்தை எடுத்துச் செல்வது அல்லது ஏடிஎம்களைத் தேடுவது பற்றி கவலைப்படத் தேவையில்லை என்று அது மேலும் கூறியது.

















