ஈப்போ:
பேராக்கில் நேற்று இரவு 10 மணி நிலவரப்படி, 88 குடும்பங்களைச் சேர்ந்த 277 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, மூன்று தற்காலிக வெளியேற்ற மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பிடோர் ஆற்றின் நீர்மட்டம் இன்று காலை 4.11 மீற்றர்களாக இருந்த நிலையில், தற்போது 3.97 மீற்றர்களாக குறைந்தாலும் அது இன்னும் ஆபத்தான மட்டத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



















