ஈப்போ:
ஈப்போவைச் சுற்றியுள்ள பொழுதுபோக்கு மையத்தில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 24 சட்டவிரோத குடியேறிகளை மலேசிய குடிநுழைவுத் துறை (JIM) இன்று அதிகாலை கைது செய்தது.
கைது செய்யப்பட்டவர்களில் 18 தாய்லாந்து பெண்கள், ஐந்து வியட்நாம் பெண்கள் மற்றும் ஒரு தாய்லாந்து ஆடவர் என பேராக் குடிநுழைவுவு துறை இயக்குனர் மீயோர் ஹெஸ்புல்லா அப்துல் மாலிக் தெரிவித்தார்.
“தடுத்துவைக்கப்பட்டவர்கள் 20 முதல் 50 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும், அனைவரும் நாட்டில் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்ட காலத்திற்கு அப்பால் மலேசியாவில் தங்கியிருந்தமைக்காகவும், 39(பி) விதி, குடிநுழைவுச் சட்டம் 1959/63 இன் பிரிவு 15(1)(c) இன் கீழும் விசாரிக்கப்படுகிறார்கள் என்று அவர் சொன்னார்.
கைது செய்யப்பட்ட அனைவரும் விசாரணை மற்றும் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஈப்போ குடிநுழைவு டிப்போவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று, ஓர் அறிக்கையின் மூலம் கூறினார்.
வெளிநாட்டு குடியேறிகளை வேலைக்கு அமர்த்தும் அல்லது பாதுகாக்கும் எந்தவொரு முதலாளி அல்லது தனிநபர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், அத்தோடு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்றும் மியோர் கூறினார்.