சுங்கைபட்டாணி, மே –
கெடா மாநில சூரியவேல் இயக்கத்தின் ஏற்பாட்டில் இளைஞர்களுக்கான கால்பந்து விளையாட்டுப் போட்டி சொங் வா சீனப் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.
இதில் 150 இளைஞர்கள் பங்குப் பெற்றதாக கெடா மாநில சூரியவேல் இயக்கத்தின் தலைவர் ஆ.லோகநாதன் தெரிவித்தார்.
ஐந்து அணிகள் கலந்துகொண்ட இந்த கால்பந்துப் போட்டியில் மேஜர் எஃப்சி இந்திய இளைஞர்கள் அணி மூன்றாவது இடம் பிடித்தது. வெற்றி பெற்ற மூன்றாவது அணிக்கு கோப்பையும் நற்சான்றிதழும் வழங்கப்பட்டது.
குறிப்பாக இந்த விளையாட்டுப் போட்டியின் நோக்கம், இந்திய இளைஞர்கள் விளையாட்டுத் துறையினை தேர்ந்தெடுப்பதன் வழி தவறான பாதையில் செல்வதை தவிர்ப்பதற்காக அவர்களுக்கு சிந்தனை மாற்றம் ஏற்பட்டு பல நல்ல வழிகளில் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகவே வார விடுமுறைகளான வெள்ளி, சனிக்கிழமைகளில் தொடர்ந்து பூப்பந்து, கால்பந்து விளையாட்டுகளில் தேர்ச்சி பதிவு பெற்ற பயிற்றுநர்களை வைத்து அவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுவதாக லோகநாதன் தெரிவித்தார்.
மேஜர் எஃப்சி கால்பந்து தோற்றுநர் ஆ.லோகநாதன், பயிற்றுநர் ரமேஸ்சிங்கம், சூரியவேல் பொறுப்பாளர்கள், நன்கொடையாளர்கள் ராஜா ஆகிய அனைவரும் தங்களுக்கு ஆதரவினை அளித்து வருவது குறித்து தமது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.