சென்னையில் ஆசிட் வீசி தாக்குதல்.. குழந்தை உட்பட 5 பேர் படுகாயம்

சென்னை: சென்னையில் ஈக்காட்டுதாங்கல் மெட்ரோ ரயில் நிலையம் அருகே சாலையோரம் வசிக்கும் மக்கள் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் மெட்ரோ ரயில் நிலையங்களில் ஈக்காட்டுதாங்கல் மெட்ரோ நிலையமும் ஒன்று. இதற்கிடையே சற்று நேரத்திற்கு முன்பு அங்குச் சாலையோரம் வசிக்கும் மக்கள் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஆசிட் வீசிய சம்பவம் பகீர் கிளப்புவதாக உள்ளது.

இந்த ஆசிட் வீச்சு சம்பவத்தில் குழந்தைகள் உட்பட 5 பேர் காயமடைந்துள்ளனர். இதில் குழந்தைக்குத் தான் காயம் மோசமாக இருப்பதாக்கத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அவர்கள் அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.இரவு நேரத்தில் வந்த மர்ம நபர் ஆசிட் பாட்டிலை வீசியுள்ளான். நல்வாய்ப்பாக அது நேரடியாக அவர்கள் மீது விழவில்லை. அந்த பாட்டில் அருகே விழுந்த நிலையில், அது தெறித்ததில் சாலையோரம் படுத்துக் கொண்டு இருந்தவர்கள் மீது பட்டுள்ளது.

இதில் குழந்தைக்குத் தான் பாதிப்பு மோசமாக ஏற்பட்டுள்ளது. மற்றவர்கள் அந்த ஆசிட் நெடியைச் சுவாசித்ததால் அவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.. இதையடுத்து அவர்கள் அருகே உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.இது குறித்து தகவல் கிடைத்த உடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். ஆசிட் வீசிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். அருகே உள்ள சிசிடிவி கேமார காட்சிகளை ஆய்வு செய்யவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here