ஈப்போ:
இன்று மாலை ஒரு மணி நேரம் பெய்த கனமழைக்குப் பிறகு, கேமரன் ஹைலேண்ட்ஸின் ரிங்காப்பில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது, இதனால் அங்குள்ள சுமார் பத்து வீடுகள் நீரில் மூழ்கின.
கம்போங் பாரு ரிங்காப்பில் இன்று (மே 22) இரவு 7.15 மணியளவில் நீர்மட்டம் உயரத் தொடங்கியதாக தானா ராடா சட்டமன்ற உறுப்பினர் ஹோ சி யாங் கூறினார்.
கிராமத்தின் சில பகுதிகளில் முழங்கால் மட்டத்திற்கு மேல் நீர்மட்டம் உள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மக்களில் ஒரு குடும்பத்தினர் மட்டும்
முன்னெச்சரிக்கையாக தங்கள் உறவினர் வீட்டில் தங்க முடிவு செய்ததாகவும், ஏனைய குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டனர் என்றும் அவர் சொன்னார்.
“கடந்த ஆண்டு டிசம்பரில் இந்தக் கிராமத்தில் வெள்ளம் ஏற்பட்டதாக கூறிய அவர், ரெலா, தன்னார்வ தீயணைப்பு வீரர்கள் மற்றும் உள்ளூர் அரசு சாரா நிறுவனங்கள் போன்ற பல அரசு நிறுவனங்கள் மழை நின்றவுடன் அந்த பகுதியை சுத்தம் செய்ய உதவியதாக ஹோ கூறினார்.
இந்நிலையில் இரவு 7.46 மணியளவில் தண்ணீர் குறைந்ததாக கேமரன் ஹைலேண்ட்ஸ் மாவட்ட காவல்துறை துணைத் தலைவர் அஸ்ரி ரம்லி தெரிவித்தார்.