எம்எஸ்யு பல்கலைக்கழகத்தின் 33ஆவது பட்டமளிப்பு விழாவில் 128 பாடத் திட்டங்களைச் சேர்ந்த 2,253 மாணவர்கள் பட்டம் பெற்றனர். இந்தப் பட்டமளிப்பு விழா அண்மையில் ஷா ஆலம் செக்ஷன் 13இல் உள்ள அப்பல்கலைக்கழகத்தின் வேந்தர் மண்டபத்தில் நடைபெற்றது.
இரண்டு நாட்களுக்கு மூன்று தவணைகளாக இந்தப் பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டது. அதில் 25 பேர் பிஎச்ஏ எனப்படும் முனைவர் பட்டம் பெற்றனர். மேலும் 42 பேர் முதுகலைப் பட்டமும் 1,285 பேர் இளங்கலைப் பட்டமும் 901 பேர் டிப்ளோமா பட்டமும் பெற்றனர்.

அதிலும் குறிப்பாக வர்த்தக மேலாண்மை, நிபுணத்துவக் கல்விப் பிரிவில் அதிகமானோர் அதாவது 838 மாணவர்கள் பட்டம் பெற்றனர். அதேபோல் தகவல் அறிவியல், பொறியியல் துறையில் அதிகமான அதாவது 30 பாடத் திட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பட்டம் பெற்றனர்.
இந்நிலையில் இஎஸ்எம் பிரிவில் அனைத்துலக வர்த்தகம், பேஷன் வர்த்தகப் பாடங்களுக்கான முதுகலை கல்வி சார்ந்த மாணவர்களுக்கு முதன் முறையாகப் பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டது. அதேபோல் தக்காஃபுல், தயாரிப்புகள் வடிவமைப்பு, ஒளிபரப்பு, விமானச் சேவை மேலாண்மை உள்ளிட்ட பாடத் திட்டங்களுக்கும் முதன் முறையாக பட்டமளிப்பு நடத்தப்பட்டது.

இது தவிர இம்முறை பட்டமளிப்பு விழாவில் இந்தியா, சிங்கப்பூர், உஸ்பெகிஸ்தான், துருக்கி, எகிப்து, ஜோர்டான், அமெரிக்கா, இந்தோனேசியா, சோமாலியா, சூடான், ஏமன் ஸ்ரீலங்கா, சீனா, தாய்லாந்து உள்ளிட்ட 22 நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் பட்டம் பெற்றனர்.

தொடர்ந்து இந்த எம்எஸ்யு பல்கலைக்கழகத்தின் 33ஆவது பட்டமளிப்பு விழாவில் 59 மாணவர்களுக்கு சிறந்த மாணவர்களுக்கான 5 பிரிவுகளில் விருது வழங்கப்பட்டது. வேந்தர் சங்கப் பதக்க விருது கூட்டத்திற்கு மேலாண்மை இளங்கலை மாணவரான விக்ஸா விர்ஜோவுக்கு வழங்கப்பட்டது.
தொடர்ந்து தலைவர் விருது வர்த்தக மேலாண்மை முதுகலைக் கல்வி மாணவரான லேனி யுவேனாவுக்கு வழங்கப்பட்டது. லேனி யுவேனா, தொழில்துறை மேலாண்மை இளங்கலை கல்வி மாணவர் கோ இ வோன், சமையல்கலை டிப்ளோமா மாணவர் வான் நோர் அதியா ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
மேலும் முகமட் ஷுக்ரி யாஸிட் அடைவுநிலை விருதை மனோதத்துவ இளங்கலை கல்வி மாணவர் பர்ஹானிஸ் அலினிசியா வென்றார்.தொடர்ந்து இப்பல்கலைக்கழகத்தில் டிப்ளோமா – இளங்கலை கல்விப் பிரிவைச் சேர்ந்த 28 மாணவர்கள் கல்வி விருதையும் 26 மாணவர்கள் தொழில்துறை விருதையும் வென்றனர்.இந்த விருது விழாவில் சிறப்புப் பிரமுகராக கெடா மாநில ரீஜண்ட் தெங்கு ஷராஃபுடின் பட்லிஷா இப்னி அல் – அமினுல் கரிம் சுல்தான் சலாஹுடின் வருகை புரிந்தார்.

அவருடன் பல்கலைக்கழகத் தலைவர் பேராசிரியர் டான்ஸ்ரீ டாக்டர் முகமட் ஷுக்ரி அப்துல் யாஜிட், பல்கலைக்கழக இணைவேந்தர் பேராசிரியர் புவான்ஸ்ரீ டாக்டர் ஜுனாய்னா அப்துல் ஹமிட் ஆகியோரும் இந்தப் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டனர். இதில் டாக்டர் முகமட் ஷுக்ரி தலைவர் உரையாற்றினார்.
இந்த எம்எஸ்யு பல்கலைக்கழகத்தின் 33ஆவது பட்டமளிப்பு விழாவிற்கு MSU Medical Centre, Institut Jantung Negara, Betelcare Sdn. Bhd., Rakyat Trustee Berhad, Mega Fortris Sdn. Bhd., MTS Fibromat (M) Sdn. Bhd., Malaysian Institite of Accountants (MIA), Affin Bank Berhad, Everest Corp (M) Sdn. Bhd., Lakaran Tuah Sdn. Bhd. Salient Information Sdn. Bhd., Nutri Pharmax Sdn. Bhd., Lumimedik Sdn. Bhd., Gading Kencana Sdn. Bhd., Foto Unigraduate Sdn. Bhd., Emglobal Assist Sdn. Bhd., Noor Arfa Services Sdn. Bhd., Reka Teemor Sdn. Bhd., Travel Dynamics (M) Sdn. Bhd, YS Healthcare Sdn. Bhd., Sugar Enterprise (Richiamo) as well as the Singapore based company Recruit, Place & Train Pte. Ltd உள்ளிட்ட தரப்பினர் ஆதரவு வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.




















