மனைவியை தாக்கியதாக மாற்றுத்திறனாளி ஆடவர் மீது குற்றச்சாட்டு

கோத்தா பாரு:

கோத்தா பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் தனது மனைவியை காயப்படுத்தியதாக மாற்றுத்திறனாளி ஆடவர் ஒருவர் (PwD) மீது இன்று (மே 23) குற்றம் சாட்டப்பட்டது.

முகமட் சியாருல் எபெண்டி முஹமட்,47, என்பவர் தவறான புரிதல் காரணமாக அவரது மனைவி நோராசியாத்தி முஹமட் ரெபு 37, என்பவரை துடைப்பத்தால் அடித்து, காயப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.

கடந்த மே 10 ஆம் தேதி காலை 10 மணியளவில் கம்போங் பெர்ஹாலா பாங்குவில் உள்ள ஒரு வீட்டில் இந்த குற்றம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

குற்றவியல் சட்டத்தின் 324வது பிரிவின் கீழ் அவருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் அவர் தான் குற்றமற்றவர் என்று கூறி, விசாரணை கோரினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி நிக் ஹப்ரி முஹமட், குற்றஞ்சாட்டப்பட்டவரை ஒரு ஆட்பிணையுடன் RM7,000 ஜாமீனில் வெளியில் செல்ல அனுமதித்ததுடன், இவ்வழக்கை ஜூன் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here